லக்க லக்க லக்க
சந்திரமுகி படம் பார்த்தோம். ஒரிஜினல் தலைவரின் படம் – அதாவது ஒரிஜினல் ஒரிஜினல் தலைவரைச் சேர்க்காமல். (வேற யாரு, நம்ம எம்.ஜி.ஆர். தான்.) ஆமாம் – இப்போது, தலை யாரு? (என் 9 வயசுப் பையன் பத்ரியைக் கேட்டால், விஜய் தான் என்கிறான். அவனை வெறுப்பேற்ற, நான் அஜீத் பேரைச் சொல்வது வழக்கம்).
Back to Chandramukhi.
நன்றாக, ‘சஸ்பென்’ஸைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால், சில படங்களில், யாராவது, flash back சொல்லும் போது, அவர்கள் இல்லாத இடங்களில் நடப்பதைக் கூட சொல்வது மாதிரி, கடைசியில் குற்றவாளி முன்னால் தெரியும் போதே, பின்னால் நடக்கும் அமாநுஷ்ய விஷயங்களுக்கு எல்லாம் ஏதும் விளக்கம் கிடைக்கவில்லை.
படம் பார்க்கும் போது, பயங்காட்ட வேண்டிய விஷயங்கள் சிரிப்பு மூட்டினாலும் (பத்ரிக்குக் கூட!), ராத்திரி தனியாக பாத்ரூம் போகும் போது, அந்த ‘முழி’ கொஞ்சம் பயம் மூட்டியது, உண்மை.
தலைவர் சண்டையின் போது, வாயில் என்ன, பபுள் கம்மா? அடக் கடவுளே!
மொத்தத்தில், ஓ.கே. ஆனால், வயதானதாலோ (எனக்கு) என்னவோ, ரஜினியின் ‘ஆயிரம் ஜன்மங்கள்’ ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது. (இதே போல் தான், சி.சுந்தரின் படம் ஒன்று, லவ்லியா?, பார்க்கையில் பழைய படம், ‘பெண்ணே நீ வாழ்க’ தான் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது.)
பி.கு.: தலைப்புக்கும் படத்திற்கும், என்ன சம்பந்தம் என்று கேட்டால், ரொம்ப சந்தோஷப் படுவேன் – ஏனென்றால், அப்படிக் கேட்டால், நீங்கள், தமிழில், என் ‘ப்ளாக்’ தவிர, வேறெதுவும் படிப்பதில்லை என்று அர்த்தம்! எழுதுபவனுக்கு, வேறென்ன வேண்டும்?

0 Comments:
Post a Comment
<< Home